திருச்சி மாநகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

திருச்சி மேல சிந்தாமணி நடுத்தெரு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ் (37). இவர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சுதி கேஸ் என்ற பாரத் கேஸ் ஏஜென்சில் சிலிண்டர் எடுத்துச் செல்லும் சப்ளையர் பணி செய்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டில் உபயோக சிலிண்டர் 15 மற்றும் கமர்சியல் சிலிண்டர் 30 என சுமார் 45 சிலிண்டர்களுக்கு மேல் வைத்துள்ளார். சந்தோஷின் தாயார் ராஜேஸ்வரி (70) என்பவர் வீட்டில் இருந்த பொழுது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு எலக்ட்ரிக்கல் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து விட்டனர். இதைப்பற்றி தகவலறிந்த வந்த கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில்.... சந்தோஷை பிரிந்த அவரது மனைவி 5 வயது மகளுடன் வேறு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் தனது தாயார் ராஜேஸ்வருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 

இதற்கிடையில் பாரத் கேஸ் ஏஜென்சி சம்பந்தப்பட்ட வீட்டிற்கு பயன்படுத்தும் 14.2 கிலோ சிலிண்டர் மற்றும் கடைகளில் பயன்படுத்தும் 19 கிலோ சிலிண்டர்களை வாங்கி சட்ட விரோதமாக சிலிண்டர் நிரப்பும் பணியை ராடு மூலம் வைத்து தனது வீட்டு உள்ளேயே செய்து வந்துள்ளார்.

இவர் யாருக்காவது சிலிண்டர் தீர்ந்து விட்டால் கமர்சியல் சிலிண்டரை வீட்டு உபயோகத்திற்கு ரூபாய் 2000 வரை யாருக்கும் தெரியாமல் விற்று வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கோட்டை காவல் துறையினர் சந்தோஷை சிவில் சப்ளை போலீசாரிடம் ஒப்படைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO