திருச்சி விமான நிலையத்தில் 70 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 70 லட்சம் மதிப்புள்ள 780 கிராம் தங்கம் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் பயணம் செய்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது ஆண் பயணி ஒருவர் அவருடைய உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது சோதனையில் தெரிய வந்தது. 70 லட்சத்து 71 ஆயிரத்து 480 ரூபாய் மதிப்புள்ள 780 கிராம் தங்கத்தை சுங்கத்துறை
அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision