போதைப்பொருள் பயன்படுத்திய பிரபல கலர் லேப் உரிமையாளரின் மகன் கைது

திருவெறும்பூர் அருகே போதைப்பொருள் பயன்படுத்திய பிரபல கலர் லேப் உரிமையாளரின் மகனை திருவெறும்பூர் ஏஎஸ்பி தலைமையில் ஆனபோலீசார் கைது செய்துள்ளனர்.திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பெனவாத்திற்கு திருவெறும்பூர் பகுதியில் அதிக போதை தரக்கூடிய போது வஸ்துக்கள் பயன்படுத்தப்படுவதாகஅண்டை மாநில போலீசாரிடம் இருந்து தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அவரது தனி படை போலீசார் சம்பந்தப்பட்ட அவர்களை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.அதன் அடிப்படையில் திருச்சி தென்னூர் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் சம்பத் இவர் திருச்சியில் உள்ள பிரபல கலர் லேப்(தீபம்)உரிமையாளர் ஆவார்.இவரது மகன் விமல் குமார் (34) இவர் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பொரியல் பட்டதாரி ஆவார் இவர் படிப்பை முடித்துவிட்டு வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர் விலையுயர்ந்த போதை பொருட்கள் பயன்படுத்துவது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் அவரை அரவிந்த் பெனாவாத் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்து பெத்தப் பெட்டமை 4 கிராம் 2, எம் டி எம் ஏ 3 கிராம் 4 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.பின்னர் விமல் குமாரை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.திருவெறும்பூர் போலீசார் விமல் குமாரிடம் விசாரணை செய்த பொழுது சமூக விரோத செயல்களின் நெட்வொர்க்கான டார்க் நெட் என்ற ஒரு இணையதளம்
உள்ளதாகவும் அதில் இந்த பொருளை வாங்கி பயன்படுத்துவதாகவும் கடந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் கல்வி பயின்ற மாணவர்களுடன் நடந்த விருத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் அப்பொழுது கிடைத்த தொடர்பில் இந்த போதை பொருளை வாங்கி பயன்படுத்தியதாகவும் இந்த போதை பெருள் நைஜீரியா, அமெரிக்கா நாடுகளில் இருந்து கிடைப்பதாகவும் இதில் எம் டி எம் ஏ என்ற போதை மாத்திரை விலை ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என்றும் இதை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அப்படி பயன்படுத்தும் பொழுது சுமார் 3 மணி
நேரத்திற்கு மேல் போதை இருக்கும் என்றும் அதன் பிறகு தொடர்ச்சியாக இதை பயன்படுத்தினால் எந்த வித உணர்வு இருக்காது என்று மூன்று மாதத்திற்கு பிறகு இதனுடைய போதையை அழுத்தம் குறையும் என்றும் அதன் பிறகே மீண்டும் அந்த எம் டி எம் ஏ போதை மாத்திரையை எடுத்துக் கொண்டார் போதை தெரியும் என்று விமல் குமார் தெரிவித்துள்ளான்.
மேலும் விமல் குமாருக்கு இந்த போதை வஸ்து எப்படி கிடைத்தது இது யார் மூலமாக வந்தது அவர்கள் யார் என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision