குறைந்த கட்டணத்தில் கோடை விடுமுறையை கொண்டாட யாழ்ப்பாணம் செல்லலாமா!

குறைந்த கட்டணத்தில் கோடை விடுமுறையை கொண்டாட யாழ்ப்பாணம் செல்லலாமா!

திருச்சிராப்பள்ளி மற்றும் இலங்கை யாழ்ப்பாணம் விமானநிலையத்திற்கு 47 ஆண்டுகளுக்குப் பின்னர் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் கடந்த மார்ச் 30ம் தேதி முதல் தொடங்கியது ..

இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றதால் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தன

  போர் முடிவடைந்த நிலையில் விமான சேவைகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்பட்டு தற்போது திருச்சி யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது.

எனவே திருச்சியில் இருந்து ஒரு மணி நேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு சென்றடையலாம்.

குறைந்த கட்டணத்தில் ஒரு மணி நேரத்தில் இலங்கை செல்வது இந்த கோடை விடுமுறையில் தமிழ் மக்களின் சுற்றுலாவை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது ..

 யாழ்ப்பாணத்தில் இருந்து திருச்சி வரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தங்களுடைய வணிகம் மற்றும் மருத்துவ சேவைக்காக திருச்சியில் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் நம் தமிழக வரலாற்றுடன் அதிக தொடர்புடையது ..சோழப் பேரரசு காலத்தில் இருந்து யாழ்ப்பாணம் வணிகத் தொடர்புடையது...

 பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும் திருச்சியில் இருந்து இலங்கை சென்று வர முடியும்.

 இந்தியர்களுக்கு இலங்கை செல்ல விசா தேவை இல்லை என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு அறிவித்திருந்தது இந்த நிலையில் இந்த கோடைகாலத்தில் விமான சேவை பொதுமக்களிடம் பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சோழர் கால வரலாற்றுடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தை இந்த விடுமுறை நாட்களில் குறைந்த கட்டணத்தில் சென்று ரசித்து வருவதற்கான ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision