பொது இடத்தில் புகைபிடித்ததற்காக 9 பேருக்கு அபராதம்: திருச்சி கார்ப்பரேஷன் அதிரடி:

பொது இடத்தில் புகைபிடித்ததற்காக 9 பேருக்கு அபராதம்: திருச்சி கார்ப்பரேஷன் அதிரடி:

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புகைபிடித்த 9 பேருக்கு தலா 100 ரூபாய் அபராதம்.பொது இட விதிகள் 2008 படி புகைப்பிடிப்பதை தடைசெய்யும் விதிகளின் கீழ் மத்திய பேருந்து நிலையத்தில் சிகரெட் புகைத்தற்காக 9 பேருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடமான மிகவும் பரவலாக இருக்கக்கூடிய மத்திய பேருந்து நிலையத்தில் பொன்மலை மண்டல துப்புரவு பணியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

மத்திய பேருந்து நிலையத்தில் திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் சென்னை தடங்களில்
பேருந்துகளுக்கு அருகில் உள்ள பயணிகள் புகைப்பதை கவனத்தில் கொண்டு சுகாதாரத்துறையினர் மற்றும் திருப்பதி தலைமையிலான குழு 9 பேருக்கு அவதாரத்தை விதித்து வசூல் செய்தனர். அபராதத்தை செலுத்த அதிக பணம் இல்லாத நபர்களிடம் அக்குழுவினரால் எச்சரிக்கப்பட்டனர்.

“நாங்கள் ஒவ்வொரு 3 நாட்களுக்கும் ஒருமுறை இதுபோல் மறைமுக பரிசோதனை தொடர்வோம். தெரியாதவர்களுக்கும் கவனம் செலுத்தப்படும்” என்று திருச்சி கார்ப்பரேஷன் அதிரடியாக தெரிவித்துள்ளது.