தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்

1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதி 15ன் படி தங்களது கடைகள் நிறுவனத்தின் பெயர் பலகையை முதலில் தமிழில் பெரியதாகவும் பின்னர் ஆங்கிலத்தில் இடம்பெறுமாறு வைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு தமிழ் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களுக்கு முதல் முறை குற்றத்திற்கு குறியீட்டுத் தொகை ரூபாய் 2000 அபராதமும் மேலும் இரண்டாம் முறை அதே குற்றத்திற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 பிரிவு 42 b-யின் படி உணவு நிறுவனங்களின் பெயர் பலகை முதலில் தமிழ் பெரியதாகவும் பின்னர் ஆங்கிலத்தில் இடம்பெறுமாறு வைக்காத நிறுவனங்களுக்கு அவர்களின் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். தொழிலாளர் உதவி ஆணையர் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision