வேட்டி கட்டிய தமிழன் நாட்டை ஆள வேண்டும்: ஐ.ஜே.கே., மாநாட்டில் பாரிவேந்தர் பேச்சு

வேட்டி கட்டிய தமிழன் நாட்டை ஆள வேண்டும்: ஐ.ஜே.கே., மாநாட்டில் பாரிவேந்தர் பேச்சு

இந்திய ஜனநாயக கட்சி சார்பில், திருச்சியில் ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ என்ற மாநில மாநாடு நடைபெற்றது. அதில், கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பேசியதாவது.... நாய்களை பயன்படுத்தி வேட்டையாடும் காட்டு நாயக்கர் இன மக்கள், ஆண்டுக்கு ஒருமுறை ஜக்கம்மாளை வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த சமுதாய மக்களை அழைத்துச் சென்று, மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தேன். அதன் பேரில், நாய்களும், முயலும் வன விலங்கு பட்டியலில் இருந்து விலக்கு பெற்றுத் தரப்பட்டது.

வேட்டி கட்டிய தமிழன் இந்த நாட்டை ஆள மாட்டானா? என்று பல ஆண்டு காலமாக பலரும் பேசியிருக்கின்றனர். அது நடக்கத் தான் போகிறது.  கடந்த 2014ல், குஜராத் முதல்வராக இருந்த போது, மோடியை எஸ்.ஆர்.எம்., பல்கலை பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்து வந்தோம். அப்போது, இருவரும் பெற்ற தாயை பற்றித் தான் அதிகம் பேசினோம். அப்போது, நீங்கள் ஆறு மாதத்தில் பிரதமராக வருவீர்கள், என்றேன். மோடிக்கு அந்த தகுதியும் இருந்தது. அவர் ஒரு தெய்வப்பிறவி, ஞானி, துறவி. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கு வந்தவர்கள் யாராக இருந்தாலும், உயர்வு பெற்று இருக்கின்றனர். இந்தியாவின் பெயரை, புகழை உயர்த்துவதற்கு காரணமாக இருக்கும் மோடி, மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறார்.

தமிழகத்தின் செங்கோளை பார்லிமெண்டில் நிறுவியதால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடமைப்பட்டு உள்ளோம். நாம் வாழும் தமிழ் பூமியில், பிரிவினையை மறைமுகமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒன்றியம் என்ற வார்த்தையை எங்கு தான் கண்டுபிடித்தார்கள், என்று தெரியவில்லை. அவர்கள், அந்த வார்த்தையை சொல்லும் போது, நான் பெரிதும் புண்படுத்தப்படுகிறேன். நாட்டின் ஜனநாயகத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் ஊழல், லஞ்சம், மது ஒழிக்கப்பட வேண்டும். வரும் தேர்தலில், மீண்டும் வெற்றி பெறுவதன் வாயிலாக அதை செய்வோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து பேசியதாவது: உழைப்பவனுக்கும், விவசாயிக்கும் அங்கீகாரமும் அடையாளமும் தேவை. அவர்கள் சுய கவுரவத்தோடு வாழ வேண்டும். ஒரு விவசாயி தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும், என்பதே கட்சியின் நோக்கம். எதற்கும் கை நீட்டாத தன்மானம் உள்ளவர்களுக்காக துவங்கப்பட்ட இந்திய ஜனநாயக கட்சி, தேசிய பார்வையோடு வெற்றி நடை போடும், என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision