ஒரு வாரம் ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
(2019-2020) ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட (27.12.1956) ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணையின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் (18.12.2024) முதல் (27.12.2024) வரையிலான வார காலத்திற்கு கொண்டாடப்படவுள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10:30 மணி முதல் நடைபெறும்.
இந்த ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வின் ஒருபகுதியாக ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் (18.12.2024). (19.12.2024) மற்றும் (20.12.2024) ஆகிய நாட்களுக்கு கணினித்தமிழ் மற்றும் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழிச்சட்ட அரசாணை, மொழிப்பயிற்சி, கலைச்சொல்லாக்கம், வரைவுகள், குறிப்புகள் எழுதுதல், முதலிய தலைப்புகளில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகக் கூட்ட அரங்கில் அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சியும், (23.12.2024) அன்று இருங்களுர் எஸ்.ஆர்.எம். டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் பட்டிமன்றமும்,
(24.12.2024) அன்று தமிழ் வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலத்துறையினருடன் வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களின் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி வணிகர் சங்கம் அலுவலகக் கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டமும், (26.12.2024) அன்று தமிழ் அமைப்புகள், நிர்வாகிகளுடன் இணைந்து மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டமும் நடைபெறவுள்ளன.
ஆட்சிமொழிச் சட்டவார விழாவின் முக்கிய நிகழ்வாக (27.12.2024) அன்று காலை 09:30 மணியளவில் அரசுப் பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி மாவட்ட ஆட்சியரால் கொடியசைத்து தொடங்கிவைத்தும், மேற்படி பேரணி காந்தி சந்தை காவல் நிலையத்தில் தொடங்கி மேலரண் சாலை வழியாக தெப்பக்குளம் பிஷப்ஹீபர் மேனிலைப்பள்ளியில் வந்தடையவுள்ளது என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision