பச்சமலையில் 500 அடி பள்ளதில் விழுந்த சரக்கு லாரி!

பச்சமலையில் 500 அடி பள்ளதில் விழுந்த சரக்கு லாரி!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சியை சேர்ந்த பச்சைமலை பகுதியில் குண்டக்காடி கிராமத்தில் மரவள்ளி கிழங்கு ஏற்றி கொண்டு ஆத்தூர் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை செந்தாரப்பட்டியை சேர்ந்த மோகன் ( 62) என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார். 170 மூட்டைகள் மரவள்ளி கிழங்குடன் லாரியை மோகன் ஆத்தூரை நோக்கி ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது லாரி மலையின் மேலிருந்து கீழே இறங்கும் வழியில் மூன்றாவது வளைவில் திரும்பும் பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் ஓரத்தில் அமைந்திருந்த தடுப்புச் சுவர்களை இடித்து தள்ளி சுமார் 500 அடி பள்ளத்தில் தலை குப்புற விழுந்தது. பள்ளத்தில் கவிழ்ந்த லாரியில் இருந்த மரவள்ளி கிழங்கு மூட்டைகள் சிதறியுதுடன், 20 அடி பள்ளத்தில் மரத்தில் மோதி லாரி தலை குப்புற நிலையில் நின்றது.

இருசக்கர வாகனத்தில் சென்ற மலை வாழ் மக்கள் துரிதமாக செயல்பட்டு லாரியில் இருந்த ஓட்டுநரை சிறுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision