கிராம பட்டையதார்ர்களை தாக்க முயன்றதாக கோயில் இணை ஆணையர் உள்ளிட்டோர் மீது போலீஸில் புகார்

கிராம பட்டையதார்ர்களை தாக்க முயன்றதாக கோயில் இணை ஆணையர் உள்ளிட்டோர் மீது போலீஸில் புகார்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை ஊராட்சியில் புண்டரீகாட்சப்பெருமாள் கோயில்.
உள்ளது. இக்கோயிலின் வடக்கு வாசல் கோபுரம் அருகில் ராசாம்பாளையம், பூனாம்பாளையம், வடக்கிப்பட்டி ஆகிய கிராம மக்களுக்கு நீண்ட காலமாக தண்ணீர் பந்தல் உள்ளது. 

இந்த பழமையான தண்ணீர் பந்தல் இடியும் நிலையில் இருந்ததால், கிராம பட்டையதார்ர்கள் பழைய தண்ணீர் பந்தலை இடித்து அதே இடத்தில் புதிதாக கான்கீரிட் செட்டில் தண்ணீர் பந்தல்  அமைத்தனர். இந்த தண்ணீர் பந்தலை அகற்ற வலியுறுத்தி கோயில் பக்தர் ஒருவர்  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்ததின் பேரில் , உயர்நீதிமன்றம் தண்ணீர் பந்தல் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்திரவிட்டது.

இதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் வட்டாச்சியர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை பூனாம்பாளையம், வடக்கிப்பட்டி, ராசாம்பாளையம் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரம்பரியமாக இருந்து வரும் தண்ணீர் பந்தலை முன்னறிவிப்பு இல்லாமல் அகற்ற முயன்ற கோயில் நிர்வாக அதிகாரிகளை எதிர்ப்பு தெரித்ததால், கிராம மக்களை தாக்க முயன்றதாக கோயில் இணை ஆணையர் உள்ளிட்டோர் மீது கிராம பட்டையதார்ர்கள் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பு அகற்றுவது தடைபட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக இன்று மாலை மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர்  தலைமையில் கோயில் நிர்வாகம், கிராம பட்டையதார்ர்கள் என  இருதரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்த மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் மலர் முடிவு செய்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS