குடி பிரச்சனையா? குடியை விட விருப்பமா? இலவச உதவிக்கு...

குடி பிரச்சனையா? குடியை விட விருப்பமா? இலவச உதவிக்கு...

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (திருச்சி டிஸ்ட்ரிக் சர்வீஸ் கமிட்டி)

ஏஏ : ஒரு கண்ணோட்டம் : ஏஏ என்பது என்ன?

ஆல்கஹாக்ஸ் அனானிமஸ் என்பது உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு தோழமை இயக்கமாகும். வாழ்க்கையின் பலதரப்பட்ட துறைகளிருந்தும் ஆண்களும், பெண்களும் தாமே விரும்பி இதில் சேர்ந்துள்ளனர். அவர்கள் தெளிவுநிலை பெறுவதற்கும் அதைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் ஒன்று கூடுகிறார்கள். குடியை நிறுத்த வேண்டும் என்ற விருப்பமே அங்கத்தினராக ஒரே தகுதி. இதற்கு நுழைவுக் கட்டணமோ சந்தாவோ இல்லை.

தற்போதைய அங்கத்தினர் எண்ணிக்கை : 180 நாடுகளில் சுமார் 1,00,000 குழுக்களும் 20,00.000க்கு மேற்பட்ட உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் 65 குழுக்கள் வாரத்தில் 65 கூட்டங்களும் தமிழ்நாட்டில் மொத்தமாக 200க்கும் மேற்பட்ட கூட்டங்களும் நடத்தபடுகிறது. தொழில் நிறுவனங்களிலும் மருத்துவமனைகளிலும் சில கூட்டங்கள் நடைபெறுகின்றன. மற்றும் தமிழகமெங்கும் பல குழுக்கள் இயங்குகின்றன.

வெளி நிறுவனங்களுடன் தொடர்புகள் : குடிநோய் பிரச்சனை சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல், ஆனால் இணைவதில்லை என்ற கொள்கையை இத்தோழமை இயக்கம் மேற்கொண்டுள்ளது. வெளி விவகாரங்களைப் பற்றி எங்களுக்கு எந்த விதமான அபிப்ராயமும் கிடையாது. அவற்றை எதிர்ப்பதோ, ஆதரிப்பதோ இல்லை.

ஏ.ஏ. எவ்வாறு ஆதரிக்கப்படுகிறது?

பல ஆண்டுகளாகவே ஆல்கஹாக்ஸ் அனானிமஸ் உறுப்பினர் இல்லாதவர்களிடமிருந்து நன்கொடை கேட்பதோ, ஏற்றுக் கொள்ளவதோ இல்லை. முழுவதும் தன் செலவைத் தானே ஏற்றுக்கொள்வது என்ற கோட்பாட்டை வயுறுத்தி பலப்படுத்தி வந்துள்ளது. ஒரு தனிப்பட்ட உறுப்பினர் கொடுக்க கூடிய நன்கொடைக்கு கூட அதிகபட்ச வரம்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஏ. உறுப்பினர்கள் எவ்வாறு தெளிவு நிலையைப் பராமரிக்கிறார்கள்? ஏஏ குடிப்பழக்கத்திருந்து முற்றிலுமாக விலகியிருக்கும் ஒரு திட்டமாகும். ஒரு நாள் அடிப்படையில் உறுப்பினர்கள் முதல் குடியிருந்து விலகியிருக்கிறார்கள். தங்கள் அனுபவம். தெம்பு. நம்பிக்கை இவைகளை கூட்டங்களில் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலமும், குடிநோயிருந்து மீளுவதற்காக ஆலோசனையாக கூறப்பட்டுள்ள பன்னிரண்டு வழிமுறைகளின் மூலமும் தெளிவுநிலை பராமரிக்கப்படுகிறது.

ஆல்கஹாக்ஸ் அனானிமஸ் அநாமதேய நிலையை ஏன் மேற்கொண்டுள்ளது.

தாங்கள் இன்னாரென்று வெளிப்படுத்தாமல் இருப்பதே ஏஏயின் ஆன்மீக அஸ்திவாரமாகும். இந்த கோட்பாடு தனி நபர்களாலன்றி தத்துவங்களாலேயே ஏஏ தன்னை தானே நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஒழுங்குப்படுத்துகிறது. ஏஏயின் மீட்புத் திட்டத்தைப் பிறருக்கு தெரியப்படுத்த மனமாரப் பாடுபடுகிறரமே தவிர அத்திட்டத்தில் பங்குகொள்ளும் தனி மனிதர்களை பிரபலபடுத்த அல்ல. பொதுத் தொடர்பு சாதனங்களில் நாம் இன்னாரென்று வெளிப்படுத்தாமருத்தல். எல்லா ஏஏக்களுக்கும் குறிப்பாக புதிதாய் வருபவர்களுக்கு அவர்களும் ஏஏ உறுப்பினராய் இருப்பது. வெளியிடப்படமாட்டாது என்ற உறுதியை ஏற்படுத்துகிறது.

ஏஏயின் பொதுவான கூட்டங்களுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏஏயின் பொதுவான கூட்டங்களுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவற்றில் வழக்கமாக ஒரு தலைமைப் பேச்சாளரும் இரண்டு அல்லது மூன்று பேச்சாளர்களும் தங்களது கடந்த вытво நோய் பற்றியும். ஏஏயில் தாங்கள் நலமடைந்தது சம்பந்தமாகவும் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். சில கூட்டங்கள் குடி நோயாளியில்லாத பொது மக்களுக்கு ஏஏயைப் பற்றிக் கூறும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக நடத்தப்படுகின்றன. மருத்துவர்களும், மருத்துவ ஆலோசகர்களும் அழைக்கப்படுகிறார்கள். கலந்துரையாடும் குடிநோயாளிகளுக்கு மட்டுமேயாகும். கூட்டங்கள்

ஏ.ஏ. எப்படித் தொடங்கியது. ஒரு நியூயார்க் பங்கு மார்க்கெட் புரோக்கர், ஓஹியோ மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அறுவை சிகிச்சை மருத்துவர் (தற்போது இருவரும் கால மாகிவிட்டனர்) ஆகிய இரண்டு நம்பிக்கை இழந்த குடிக்காரர்களால் 1935ம் ஆண்டில் ஏஏ ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் குடிநோயால் துன்புறும் பிறருக்கு உதவவும் தங்களைத் தெளிவுநிலையில் வைத்துக் கொள்ளும் பொருட்டும். ஏஏயை ஏற்படுத்தினார்கள். முதல் அமெரிக்காவிலும், பிறகு உலகின் பல்வேறு நாடுகளிலும் சுயேச்சையாக செயல்படும் குழுக்கள் உருவானதன் மூலம் ஏஏ வளர்ந்தது. இந்த தோழமை இயக்கம் இந்தியாவில் மும்பையிலும் பிறகு சென்னையிலும் தொடங்கப்பட்டது.

ஏஏ குழுக்கள் சென்னை, சேலம், கடலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, திருநெல்வே, தூத்துக்குடி, பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், நாகர்கோவில், குளச்சல், கோவில்பட்டி, கூடலூர், காஞ்சிபுரம், பெரியகுளம், நெய்வே. ஈரோடு, ராணிப்பேட்டை, வேலூர். வந்தவாசி, ராமேஸ்வரம் மேலும் பல இடங்களில் நடைபெறுகிறது. நீங்கள்

ஏ.ஏ.வை பற்றி எப்படி தெரிந்து கொள்வது? 

ஆல்கஹாக்ஸ் அனானிமஸ் பற்றி அறிந்து கொள்ள தொலைபேசி எண்கள் பற்றிய விவரங்கள் அடக்கிய புத்தகத்தையோ. தினசரி நாளேட்டையோ பார்க்கவும், மாநரங்களில் மத்திய ஏ.ஏ. அமைப்பையோ அல்லது ஏ.ஏ. ஒருங்கிணைப்பு குழவையோ நாடினால் அவர்கள் உங்களது கேள்விக்கு பதில் கூறி யாரை அணுக வேண்டும் என்று கூறுவார்கள். பொது சேவை மையத்தின் விலாசம் கடைசியில் காணவும்.

ஏஏ என்னென்ன செய்யாது : உறுப்பினர் பட்டியல் அல்லது நோய் வரலாற்றுக் குறிப்புகள் வைப்பது. ஆராய்ச்சியில் ஈடுபடுவது அல்லது நிறுவனங்களில் இணைவது (ஏஏ உறுப்பினர்கள் குழுக்கள் சேவை அலுவலகங்கள் அடிக்கடி அவற்றுடன் ஒத்துழைத்தாலும்), உறுப்பினர்களைப் பின்தொடர்ந்து கவனிப்பது அல்லது கட்டுப்படுத்துவது மருத்துவ அல்லது மன நோய் கணிப்பு செய்வது அல்லது மருந்துகளோ, மன நோய் அறிவுரைகளோ வாங்குவது. உடருந்து மது நீக்கம் செய்வது செவியர் சேவை உடல் நலம் வளர்க்கும் விடுதிகள் ஏற்பாடு செய்வது மத சம்பந்தப்பட்ட சேவைகள் அளிப்பது தங்குமிடம், உணவு, உடை, வேலை, பணம் அல்லது பிற பொதுநல, சமூக சேவைகள் அளிப்பது குடும்ப சம்பந்தமான அல்லது தொழில் உத்தியோகம் சம்பந்தமான ஆலோசனை அளிப்பது போன்றவைகளை ஏஏ செய்யாது.

மேலும் விவரங்களுக்கு அணுகவும் : ஏ.ஏ பொதுசேவை அலுவலகம் (இந்தியா) P.O. Box 16958, Byculla, Mumbai-400 027. Ph: 022-23075134/23016767. Email: gsoindia@vsnl.com / Website: www.aagsoindia.org

தொடர்புக்கு : 91503 45621, 97877 37865, 95971 36401

மணப்பாறை சேவைக்குழு : 91592 27267, 98943 63786

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision