திருச்சியின் அடையாளங்கள் -எல்காட் தொழில் நுட்ப பூங்கா
இன்று கல்லூரியில் தங்களது துறைகளை தேர்வு செய்யும் மாணவர்கள் ஐடி துறையை அதிகமாக தேர்வு செய்கின்றனர். இன்று வளர்ந்து வரும் துறைகளில் ஐடி துறை மிக முக்கியமானது அனைத்து இளைஞர்களும் இந்த ஐடி துறையை தேர்வு செய்து வருகின்றனர். ஐடி துறையில் வளர்ந்து வரும் நகரமாக திருச்சி உருவாகி வருகிறது.
தமிழகத்தின் பெருநகரமான சென்னையில் ஐ.டி துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் ஐ.டி துறை வளர்ந்து வருகிறது. குறிப்பாக கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்கள் அதிகப்படியான ஐ.டி நிறுவனங்களை ஈர்த்து வருகிறது.
எல்காட் ஐடி பார்க் திருச்சி என்பது இந்தியாவின் திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப (ஐடி ) பூங்கா ஆகும் . தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (ELCOT) மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 2010 இல் இது அமைக்கப்பட்டது .
திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் (9.3 மைல்) மற்றும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 9 கிலோமீட்டர் (5.6 மைல்) தொலைவில் உள்ள நவல்பட்டில் உள்ள எல்காட் 2 ஏக்கர் நிலப்பரப்பில் எல்காட் ஐடி பார்க் திருச்சி அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து போலீஸ் காலனி என்ற நகரப்பேருந்து மூலம் எல்காட் நிறுவனத்திற்கு வரலாம்.
இரண்டு ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள எல்காட் ஐடி கட்டிடம் , ₹ 60 கோடி (US$7.2 மில்லியன்) செலவில் MARG லிமிடெட் மூலம் கட்டப்பட்டது. ஐடி நிறுவனத்திற்குரிய அனைத்து வசதிகளோடு இயற்கை எழிலோடு எல்காட் ஐ டி பார்க் அமைந்துள்ளது. திருச்சி நவல்பட்டு பகுதியில் இருக்கும் எல்காட் (ELCOT) ஐ.டி பார்க்கில் டெக்னாலஜிஸ், ஐ லிங்க் சிஸ்டம்ஸ், டிசாஸ்டர் ரெக்கவரி சென்டர், வூரம் டெக்னாலஜிஸ், GI TECH GAMING போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறதுஇதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில்,புதிதாக 1.16 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய ஐ.டி பார்க் கடந்த சில வருடங்களாகக் கட்டப்பட்டு வந்த நிலையில், கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்து பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. திருச்சி நவல்பட்டுப் பகுதியில் இருக்கும் எல்காட் ஐ.டி பார்க்கின் 2 வது கட்ட திட்டத்தில் 1.16 லட்சம் சதுர பரப்பளவில் புதிய ஐ.டி டவர் சுமார் ரூபாய் 59.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது.இந்தத் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தின் மூலம் சுமார் 2800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலைகள் அதிகம் உள்ள திருச்சி மாநகரில் தொழில்நுட்ப பூங்காக்கள் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கி தருகிறது அந்த வகையில் திருச்சி எல்காட் நிறுவனம் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision