காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது

flood warning Cauvery river

காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து 1.45 இலட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நாளை (28.07.2024) முழு கொள்ளளவை எட்டும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக உபரி நீர் திறந்துவிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத்தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

நீர்வரத்து அதிகமாக வரும் நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ "செல்பி" (Selfie) எடுக்க அனுமதி இல்லை.

குழந்தைகள் பார்த்துக்கொள்ளவேண்டும். நீர்நிலைகளில் கால்நடைகளை இறங்கா வண்ணம் குளிப்பாட்டுவதற்கு நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும், பாலங்கள் தவிர, பாதுகாப்பற்ற இடங்களில் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய...

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

டெலிகிராம் மூலமும் அறிய....

 https://t.me/trichyvision


https://www.threads.net/@trichy_vision