திருச்சியில் திமுக கவுன்சிலரது துப்பாக்கியை திருடிய வடமாநிலத்தவர் கைது

திருச்சியில் திமுக கவுன்சிலரது துப்பாக்கியை திருடிய வடமாநிலத்தவர் கைது

திருச்சியில் திமுக கவுன்சிலரது துப்பாக்கியை திருடிய, உத்தர பிரதேச மாநில இளைஞர் கைது.திருச்சியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நகராட்சி நிர்வாக துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில், டெல்டா மாவட்டங்களின் நகர்மன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 20- வது வார்டு திமுக கவுன்சிலர் சங்கர் என்பவர் தனது கை துப்பாக்கி பங்கேற்றார்.கழிப்பறைக்கு சென்று திரும்பி போது கவுன்சிலரது கைது துப்பாக்கி களவு போனது.இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் ஐந்து பேரிடம் கன்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் ஹோட்டல் ஊழியர் ஒருவர், துப்பாக்கியை திருடி, தனது துணிப்பைக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.துப்பாக்கிய திருடிய ஊழியர் உத்திர பிரதேசத்தை சேர்ந்த கிருஷ்ண என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கித் திருட்டின் பின்னணியில் யார் யாரெல்லாம் உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision