சமயபுரம் கோவிலுக்குள் பக்தர்களை அனுப்ப போலி டோக்கன் கொடுத்த ஊர் காவல் படையைச் சேர்ந்தவர் கைது

சமயபுரம் கோவிலுக்குள் பக்தர்களை அனுப்ப போலி டோக்கன் கொடுத்த ஊர் காவல் படையைச் சேர்ந்தவர் கைது

திருச்சி சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் மூலம் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களிடம் கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து அறநிலைய துறை உயரதிகாரிகள் உத்தரவின்படி கோவில் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க செய்வதற்காக வந்தனர். அப்போது ஊர்க்காவல் படையில் வேலை பார்த்துவரும் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் அன்று பணியில் இல்லாத நிலையிலும் சீருடை அணிந்து டோக்கன்களை பக்தர்களுக்கு கொடுத்து அனுப்பியதாக தெரிகிறது.

இதுகுறித்து கோவில் கண்காணிப்பாளர் சாந்தி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn