நண்பர்களுடன் அய்யன் வாய்க்காலில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரல் மூழ்கி பலி

நண்பர்களுடன் அய்யன் வாய்க்காலில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரல் மூழ்கி பலி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள துடையூர் கிராமத்தில் உள்ள அய்யன் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் முகொம்பு காவிரி ஆற்றில் இருந்து காவிரி, கொள்ளிடம் மற்றும் அய்யன் வாய்க்கால் என மூன்றாக பிரியும் பகுதியாகும்.

இந்நிலையில் தினசரி வாய்க்காலில் தண்ணீர் அதிகரித்து வருவதால் காவல்துறை பொதுமக்கள் குளிக்க எச்சரிக்கை விடுத்தும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கண்டு கொள்ளாமல் தண்ணீரை கண்ட ஆனந்தத்தில் மரக்கிளை, பாலம் மற்றும் தடுப்பு சுவர்களில் ஏறி வாய்க்காலில் குதித்து விளையாடு வருகின்றனர். 

இந்நிலையில் துடையூர் பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 5 பேர் துடையூர் பேருந்து ஸ்டாப் அருகே உள்ள அய்யன் வாய்க்காலில் குளிக்க சென்றனர். இதில் அங்குள்ள பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து குளித்துக் கொண்டிருந்த போது,கரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் ராம்குமார் (13) திடீரென தண்ணீரின் அதி வேகத்தில் அடித்து சென்று நீரில் மூழ்கி விடவே இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர்.

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வாய்க்காலில் இறங்கி தேடினர். அதனைத்தொடர்ந்து வாத்தலை காவல்நிலையம் மற்றும் ஶ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து வாத்தலை போலீசார், ஶ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் சகயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கி இறந்த ராம்குமார் உடலை சுமார் 2 மணிநேரம் போராடத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் திருவாசி அருகே மீட்டனர்.

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision