சாலையில் சென்று கொண்டிருந்த இருவர் மீது விழுந்த மரம் - ஒருவர் படுகாயம்
திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை தூரலுடன் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஆங்காங்கே மரக்கிளைகள் உடைந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும் சாலையில் விழுகின்றன. இதனால் சாலையில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் சென்று வருகின்றனர்.
இது மட்டுமின்றி பலத்த காற்றின் காரணமாக மின் கம்பிகள் உரசி அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி காவேரி பாலம் மாம்பழம் சாலையில் உள்ள மகளிர் காவல் நிலைய எதிரே ஒரு மரம் திடீரென வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த சுப்பையா (46) மற்றும் ராஜாமணி (60) ஆகியோர் மீது மரம் விழுந்தது.
உடனே பகுதியில் இருந்தவர்கள் மரக்கிளை அடியில் சிக்கி இருந்தவர்களை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision