காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட நிர்வாகி துடையூர் மேல்பத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாங்கம் (55), அவரின் மனைவியையும் அரிவாள், இரும்பு தடி கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தி, தற்பொழுது திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அவரது உடமையையும், வீட்டையும் அடித்து நொறுக்கி வீட்டில் இருந்த 5 பவுன் நகைகளை திருடிவிட்டு, அவரின் நிலத்தினை அபகரிக்க நினைக்கும் நில அபகரிப்பு ஆசாமிகள் மீது (மேல்பத்து சேர்ந்த 1. சிவநேசன் s/o சந்தனம், 2. பிரவிந்தராஜ் s/o சந்தனம், 3. பிரபாகரன் s/o சந்தனம், 4. ராஜ்குமார் s/o சுப்ரமணியன், 5. ராம்குமார் s/o சுப்ரமணியன் 6.பிரேம்குமார் S/o சுப்ரமணியன், மற்றும் பலர்) காவல்துறை வழக்கு பதிந்தும், மேலும் ராஜாங்கத்தை கொலை செய்ய வேண்டும் எண்ணத்தில் ஊருக்குள் உலாவும் வருபவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யாமல் உள்ளனர்.

காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், சங்கத்தின் மாநில செயலாளர் நகர் A. ஜான் மெல்கியோ ராஜ், மாநில செய்தி தொடர்பாளர் s. பிரேம்குமார், மாநில துணை தலைவர்கள் கரூர் தட்சிணாமூர்த்தி, பரமசிவம் திருச்சி மாவட்ட செயலாளர் மரவனூர் செந்தில்குமார்,

திருச்சி மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், உமகாந்த், ரகு ஆகியோர்களின் முன்னிலையில் 50க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் (திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் முகொம்பு அருகில் உள்ள) வாத்தலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், சாலை மறியல் செய்தும் கண்டன போராட்டம் நடத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision