கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த டூ வீலர் - புளிய மரத்தில் பாய்ந்த தனியார் பேருந்து

கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த டூ வீலர் - புளிய மரத்தில் பாய்ந்த தனியார் பேருந்து

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து துறையூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது இப்பேருந்தை சேலம் மாவட்டம் ஓலபுதூர் கிராமத்தைச் சேர்ந்த வரதன் என்பவர் ஒட்டி வந்தார். துறையூர் நகர எல்லை பகுதியான சத்யநாராயண சிட்டி அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி ன விபத்துக்குள்ளானது.

  

 இதில் பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் புளிய மரத்தில் இடிபாடுகளில் சிக்கியதை அடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் ஓட்டுநரை காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் மீதமுள்ள 10 பேர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision