தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏஐடியுசி கோரிக்கை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏஐடியுசி கோரிக்கை

விபத்துக்கள் ஏற்படாமல் தடுத்திட பணியாளர் பற்றாக்குறை போக்கப்பட வேண்டும். தேவையான உதிரி பாகங்கள் காலத்தில் வழங்கிட வேண்டும். அரசு பேருந்துகளில் உள்ள சேதங்களை ஆய்வு செய்து 48 மணி நேரத்தில் அறிக்கை தர வேண்டும், அடுத்த 48 மணி நேரத்தில் அது சரி செய்யப்பட வேண்டும் என அரசுத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

அரசு போக்குவரத்து கழகங்களில் 19469 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் மிகவும் பழைய பேருந்துகளாகும். அவைகள் ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பேருந்து இயக்குவதற்கு தகுதியான நிலையில் உள்ளது என்று சான்று பெற்று வழித்தடங்களில் இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளில் அடிச்சட்டம், பாடி உதிரி பாகங்கள், இருக்கைகள், ஜன்னல்கள், மேற்கூரை இவைகளை தொடர்ந்து சரிசெய்யப்பட வேண்டும். பயணிகள் பயணிப்பதற்கு தகுதியான நிலையில் பேருந்து உள்ளதா? என்பதை பணிமனை உதவிப் பொறியாளர் ஒப்புதல் அளித்த பின்பு ஒவ்வொரு பேருந்தும் வழித்தடத்திற்கு செல்வது நடைமுறையாகும். கடந்த 10 ஆண்டுகளாக புதிய பேருந்து மாற்றாத நிலையில் பழைய பேருந்துகளை இயக்குவதில் கூடுதல் கண்காணிப்பு அவசியம்.

கும்பகோணம் கோட்டத்தில் இயங்கும் பேருந்து தஞ்சாவூர் அய்யம்பேட்டை அருகே ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து உள்ளது. ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திருச்சி தீரன் நகர் பணிமனையை சார்ந்த ஓடிக்கொண்டிருந்த பேருந்திலிருந்து நடத்துனர் கீழே விழுந்து பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. நடத்துனர் இருக்கை தானாக கழன்று கீழே விழுந்துள்ளது நம்பும் படியாக இல்லை. அது ஆய்வுக்குட்பட்டது. இரண்டு கோடிக்கும் அதிகமான பயணிகள் நாள்தோறும் அரசு பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். அரசு பேருந்தின் மீதுள்ள நம்பகத்தன்மை உறுதிப்படுத்த வேண்டியது அரசு

மற்றும் நிர்வாகங்களின் கடமையாகும். மேற்கண்ட சம்பவங்களுக்கு கிளை மேலாளரும் பணிமனை பராமரிப்பு ஊழியர்கள் மீது பழி சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது நியாயமானது அல்ல சரியான காரணம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஒரு பேருந்தை பராமரிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு பராமரிப்பு பணியாளர் தேவை. தற்போது உள்ள பணியாளர் விகிதப்படி மிகவும் குறைந்த எண்ணிக்கையில் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். 15 ஆண்டுகாலமாக புதிய நியமனங்கள் எதுவும் இல்லை பழைய பேருந்துகளை பராமரித்திட கூடுதல் பணியாளர்கள் தேவை. ஆனால் பராமரிப்பு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

தேவையான பணியாளர்கள் இருந்தால் தான் பேருந்து பணிமனையில் நிற்கும் குறைவான நேரத்தில் பேருந்துகளை பராமரித்து சர்வீசுக்கு அனுப்ப முடியும். அரசுத்துறை செயலாளர் அறிவிப்பின்படி 48 மணி நேரத்தில் பேருந்தில் உள்ள குறைபாடுகள் கண்டறிந்து அறிக்கை கொடுப்பது நடைமுறை சாத்தியமற்றது. சர்வீஸ் முடித்த பேருந்து பணிமனையில் விடும்போது பேருந்தில் உள்ள குறைபாடுகளை ஓட்டுநர் அதற்குரிய பதிவேட்டில் பதிவு செய்து வைப்பார் பேருந்து குறைபாடு பதிவு செய்யும் பதிவேட்டை பார்வையிட்டால் பேருந்தில் உள்ள குறைபாடு விவரங்கள் தெரியவரும் தேவைக்கு ஏற்ப உதிரி பாகங்கள் வழங்கி குறிப்பிட்ட காலத்தில் மாற்றப்பட வேண்டும்.

சுமார் 2000 பேருந்துகள் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்பட்டு வருகின்றன திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி அவை மாற்றப்பட வேண்டும். ஆனால் கரோனா நோய் தொற்று காலத்தில் பேருந்து இயக்கப்படாமல் பணிமனையில் முடங்கி இருந்ததை காரணமாக சொல்லி காலாவதியான பேருந்துகள் கூடுதல் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் ஏ ஐ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அரசு போக்குவரத்து கழகங்களுக்கான வரவு செலவு பற்றாக்குறைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வே வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் பணியாளர் நியமனம் செய்திட வேண்டும். தேவையான உதிரி பாகங்கள் காலத்தில் வழங்கிட வேண்டும், காலாவதியான பேருந்துகள் சுழிவு செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றன.

எனவே,சாதாரண அடித்தட்டு மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் பொதுத்துறை போக்குவரத்து கழகங்களை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ள நிலையில், வரவு செலவு பற்றாக்குறை நிதி ஒதுக்கிட வேண்டும் காலாவதியான 350 புதிய பேருந்துகள் மட்டுமே மாற்றப்பட் டுள்ளது. இது போதுமானதல்ல. ஊழியர் பற்றாக்குறை போக்கிட வேண்டும். உதிரி பாகங்கள் தேவைக்கு ஏற்ப வழங்கிட வேண்டும். அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கான நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டியது காலத்தின்  தேவையாகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision