17 ஆண்டுகளுக்கு பிறகுதிருச்சி வயலூர் முருகன் கோயிலில் இன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது

17 ஆண்டுகளுக்கு பிறகுதிருச்சி வயலூர் முருகன் கோயிலில் இன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது

திருச்சி குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் (முருகன் கோயிலில்) (பிப்ரவரி.19) திருக்குட நன்னீராட்டு பெருவிழா (குடமுழுக்கு).

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (19ஆம் தேதி புதன்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது. 

திருச்சி குமாரவயலூர் கிராமத்தில் 9 ஆம் நூற்றாண்டு காலத்தில், இடைக்கால சோழ மன்னர்களால் இக்கோவில் கட்டுமான பணிகள்தொடங்கப்பட்டன.திருவண்ணாமலையில் 15 ஆம் நூற்றாண்டில் பிறந்த அருணகிரிநாதரால் பாடல்பெற்ற இக்கோவில், முருக பக்தர் கிருபானந்த வாரியாரால் புகழ் பெற்றது.இக்கோவில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமியையும், அதன் அருகே மற்றொரு கர்ப்ப கிரகத்தில் ஆதிநாதர் மற்றும் அவரது துணைவி ஆதிநாயகி வடிவிலான சிவபெருமானும் உள்ளனர்.

இக்கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு திருப்பணிகள் சுமார் ரூ.30 கோடி செலவில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

கடந்த 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகா கண்பதி ஹோமம், நவ கிரக ஹோமம், மகா லட்சுமி ஹோமம், தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை ஆகிய யாகசாலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.மூலஸ்தானத்திலிருந்து கடகங்கள் கொண்டு செல்லப்படவுள்ளது. 

காலை 9.15 மணிக்கு சகல விமானங்கள், ராஜ கோபுரங்கள் சமகால கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 9.50 மணிக்கு மூலாலய மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்த யாகசாலை பூஜைகள் தமிழகத்தின் மிக சிறந்த ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பன்னிரு திருமுறைகள் மற்றும் திருபுகழ் பாராயணம், நாதஸ்வர மங்கல இசையுடன் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே சமய சொற்பொழிவுகளும் நடைபெற்றுவருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision