இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 55 வயது ஆசிரியர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் போதாவூர் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெயராஜ் சூசைநாதன் (55) ஆசிரியரை ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பிறகு இவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. மிக முக்கியமாக தற்பொழுது அதிர்ச்சிகரமான தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இவர் மீது பாலியல் புகார் வரும் போது மாணவிகளையும் பெற்றோர்களையும் மிரட்டுவது போன்ற செயல்களில் இந்த ஆசிரியர் நிகழ்த்தி உள்ளதாக தெரிகிறது. இவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision