சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் அமமுகவினர் புகார்.

சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் அமமுகவினர் புகார்.

திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் அமமுக சார் அளிக்கப்பட்ட் புகார் மனுவில் கூறியிருப்பதாவது‌....

வருகிற பிப்ரவரி 24-ம் தேதி மறைந்த தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் (7×80) அடியில் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பார்க்கும் வண்ணம் எனது சொந்தப் பணத்தில் இருந்து ரூபாய் 10 ஆயிரம் செலவு செய்து சுவர் விளம்பரம் செய்திருந்தேன். இந்நிலையில் இன்று காலை நான் செலவு செய்து வரைந்த சுவர் விளம்பரத்தை ABVP (RSS)-யை சேர்ந்த மர்ம நபர்கள் அத்துமீறி எனது பெயரையும் மற்றும் தியாகத் தலைவி சின்னம்மா பெயர் வரைந்த சுவர் விளம்பரத்தை அளித்துவிட்டு அவர்களின் பெயரை எழுதியுள்ளனர். ஆளும்கட்சியின் தூண்டுதலின் பேரில் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த புகார் மனு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM