அப்துல் கலாம் 91 வது பிறந்த நாளில் 91 அப்துல் கலாம் முகமூடி அணிந்து கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

அப்துல் கலாம் 91 வது பிறந்த நாளில் 91 அப்துல் கலாம் முகமூடி அணிந்து கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து அப்துல் கலாம் 91வது பிறந்த நாளை 91 மாணவர்கள் 91அப்துல் கலாம் முகமூடி அணிந்து கொண்டாடினர்.

பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமையில் புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார், நூலகர் புகழேந்தி உள்ளிட்டோர்அப்துல்கலாம் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

  பள்ளி மாணவர்கள் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துக் கூறுகையில்,

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து 15 அக்டோபர் 1931 பிறந்து வளர்ந்தார்.

திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்கு முன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டார்.

1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக முக்கிய பங்காற்றினார்.அக்னிச் சிறகுகள், இந்தியா 2020 நூல்களை எழுதியுள்ளார்27 சூலை 2015 மேகாலயா,சில்லாங்கில்இயற்கை எய்தினார் என்றனர்.

மேலும்உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு.உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!சோதனைகளை மீறிய சாதனையில்தான் மகிழ்ச்சி இருக்கிறது என பொன்மொழிகளை அனைவரும் கூறினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO