திருச்சியில் பெந்தகோஸ்தே சர்ச் விரிவாக்க பணியின் போது மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர் பலி

திருச்சியில் பெந்தகோஸ்தே சர்ச் விரிவாக்க பணியின் போது மின்சாரம் தாக்கி இரண்டு இளைஞர் பலி.திருச்சி பிராட்டியூரில் உள்ள "தி பெந்தகோஸ்தல் மிஷன் சர்ச்" விரிவாக்கப்பணி நடைபெற்றுவருகிறது.
ஒப்பந்தத்துக்காரர் நடராஜ் என்பவரது மேற்பார்வையில் 5 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர், இன்று பிற்பகல் தகரத்தினாலான மேற்கூரை அமைக்கும் பணியில் மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர், அப்போது உயரமான நகரும் ஏணியில் ஏறி தகரத்தினால் ஆன மேற்கூரையை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஏணி சக்கரம் அதிவேகத்தில் சென்று உயர்அழுத்த மின்கம்பியில் மோதியது.
இதில் மேலே நின்று தகரத்தை கையில் வைத்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், தன்னாங்குடி கிராமத்தை சேர்ந்தகோபி என்கிற வெள்ளைச்சாமி, தர்மபுரியைச் சேர்ந்த பாக்யராஜ் ஆகிய இருவரும் தூக்கிவீசப்பட்டதுடன், ஏணியை பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், பின்னங்குடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் ஆகிய மூன்றுபேரும் தூக்கிவீசப்பட்டதில், வெள்ளைச்சாமி மற்றும் பாக்யராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவக்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த இருவரது உடல் பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது, இந்த விபத்து குறித்து திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision