புதிய சாலை அமைக்கக் கோரி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்-2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

புதிய சாலை அமைக்கக் கோரி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்-2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

மணப்பாறை அருகே 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் புதிய சாலை அமைக்கக் கோரி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல். 1 1/2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருமலையில் இருந்து மாங்னாபட்டி, களத்துப்பட்டி, அம்மாசமுத்திம், சின்னமணியங்குறிச்சி, எண்டபுளி,கண்ணூத்து ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டதாகும். 25 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தக்கூடிய இச்சாலை மிகவும் படுமோசமான நிலையில் உள்ளதால்

இப்பகுதியில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நின்று விடுகின்றன. அதேபோல் அடிக்கடி விபத்துகளும் நேருகின்றது. மேலும் வேளாண் விளைபொருட்களை மார்கெட்டுகளுக்கு கொண்டு செல்லும் விவசாயிகள் முதல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினரும் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சாலையை புதுப்பிக்கக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித

நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று காலை இப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மணப்பாறை - துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை கருமலையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலை வசதி கேட்டு முழக்கங்கள் எழுப்பினர். மேலும் சம்பவ இடத்தில் மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் புத்தாநத்தம் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும்

பொதுமக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் இப்பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தருவதாக கூறியதை அடுத்து சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஒரு மாதத்திற்குள் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறாவிட்டால் மீண்டும் அடுத்த மாதம் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி கலைந்து சென்றனர்‌. சாலை மறியலால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றதால் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision