திருச்சி மாவட்ட சாரண ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்:

திருச்சி மாவட்ட சாரண ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்:

திருச்சி இடைமலைப்பட்டி புதூர் – குழந்தை இயேசு மெட்ரிக் பள்ளியில் பாரத சாரண சாரணிய இயக்கம், மணப்பாறை கல்வி மாவட்டத்தின் சார்பாக திருச்சி வருவாய் மாவட்ட அளவில் சாரண சாரணிய ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இவ்விழாவானது திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அவர்களின் அறிவுரையின் படியும், மணப்பாறை கல்வி அலுவலர் இராமலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இவ்விழா நடைபெற்றது.

பள்ளி மாணவர்களின் கல்வி ஒழுக்கம் நாட்டுப்பற்று பெரியவர்களுக்கு கீழ்ப்படிதல் ஆகிய பண்பு வகைகளை வளர்க்கும் விதமாக ஆக்கல்கலை, வரைபடக்கலை, சமிக்ஞை மற்றும் முதலுதவி ஆகிய நான்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

Advertisement

முகாமின் நான்காவது நாளில் மாநில பயிற்சி ஆணையர் வெங்கட்ராமன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களை வாழ்த்தினார். மேலும் மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் அவர்களும் வாழ்த்தினார்.

முகாமிற்கான ஏற்பாடுகளை மணப்பாறை கல்வி அலுவலக மாவட்ட செயலாளர் மில்டன் சிவகுமார் சாமிநாதன் ஆகியோர் செய்து இருந்தனர்.