தமிழகத்தில் விரைவில் அமுல் பால் கிடைக்கும் மெதுவாகவும் வலுவாகவும் தமிழகத்தில் கால் பதிப்போம் நிர்வாக இயக்குனர் பேட்டி

தமிழகத்தில் விரைவில் அமுல் பால் கிடைக்கும் மெதுவாகவும் வலுவாகவும் தமிழகத்தில் கால் பதிப்போம் நிர்வாக இயக்குனர் பேட்டி

தமிழகத்தில் விரைவில் அமுல் பால் கிடைக்கும் - மெதுவாகவும் வலுவாகவும் தமிழகத்தில் கால் பதிப்போம் என அமுல் நிறுவன நிர்வாக இயக்குனர் அமீத் வியாஸ் பேட்டி

திருச்சியில் ஆர்கானிக் விவசாய பொருட்களின் கண்காட்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது அதற்கு இன்று வருகை தந்த குஜராத் மாநிலத்தில் உள்ள அமுல் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் அமித் வியாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்..... இதுபோன்ற கண்காட்சியை நான் இங்கு தான் முதல் முறையாக பார்க்கிறேன். அமுல் நிறுவனம் 1946 இல் இருந்து விவசாயிகளின் கூட்டுறவு முயற்சியில் நடத்தப்பட்டு வருகிறது. அமுல் நிறுவனம் கடந்த 4 வருடங்களாக ஆர்கானிக் உரம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. வரும் காலங்களில் தமிழகம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் எங்களது விவசாய உரம் மற்றும் அதன் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய உள்ளோம். தற்போது குஜராத் மாநிலத்தில் மட்டுமே விற்பனை செய்து வந்தோம் எங்களது விற்பனையை விரிவுபடுத்தி உள்ளோம். 

தமிழகத்தில் அமுல் பால் மற்றும் பால் பொருட்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளதா எனக் கேட்டபோது..... அமுல் பால் பொருட்கள் தமிழகத்தில் ஏற்கனவே உள்ளது என்றும் ஐஸ்கிரீம், பட்டர், சீஸ், சாக்லெட் போன்றவை நாடு முழுவதும் உள்ளது. தற்போது அமெரிக்காவில் எங்களது கிளை நிறுவனத்தை தொடங்கியுள்ளோம், விரைவில் ஸ்பெயின் நாட்டிலும் எங்களது பிராண்ட் அமுல் பெயரில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றார். 

தமிழகத்தில் அமுல்பால் வழங்குவதை பொறுத்தவரை நாங்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் புதிதாக ஒரு கிளை நிறுவனம் தொடங்கியுள்ளோம் . சித்தூரில் இருந்து பெங்களூருக்கு பால் சப்ளை செய்யப்படும். விரைவில் தமிழகத்திற்கும் ..... தற்போது சென்னையில் அமுல் தயிர் கிடைக்கின்றது. மெதுவாகவும் , வலுவாகவும் நாங்கள் தமிழகத்தில் கால் பதிப்போம் என்றார். 

அமுல் நிறுவனம் கூட்டுறவு நிறுவனம் விவசாயிகளிடமிருந்து எவ்வளவு பணத்தை பெறுகிறோமோ அது திரும்ப அவர்களுக்கு கிடைக்கும் வகையிலேயே எங்கள் நிறுவனம் செயல்படுகிறது. 

 திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய 

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision