மிதிவண்டியில் சென்ற முதியவர் சரக்கு லாரி ஏறி பலி- லாரி ஓட்டுனரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற கும்பல்!

மிதிவண்டியில் சென்ற முதியவர்  சரக்கு லாரி ஏறி பலி- லாரி ஓட்டுனரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற கும்பல்!

திருச்சி  இ. பி.ரோடு பகுதியில் பீகாரில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரியின் அருகில் மிதிவண்டியில் வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நிலை தடுமாறி விழுந்ததில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார் .

சம்பவம் குறித்து தகவலறிந்த கோட்டை காவல் நிலைய போலீசார் உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பீகாரில் இருந்து திருச்சிக்கு ஜவுளி துணிகளை ஏற்றி வந்த சரக்கு லாரி ஓட்டுனர் மானார் என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்குள் அங்கிருந்தவர்களில் சிலர் ஓட்டுனரை பிடித்து அடித்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றதாகவும், ஓட்டுநர் தெரிவித்துள்ள இச்சம்பவம் காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இ.பி ரோடு பகுதியில் இன்டர்மீடியட் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி பக்கவாட்டு சுவர்களில் இடித்துள்ள நிலையில், மீண்டும் கட்டுமான பணிகளை தொடங்காமல் இருப்பதன் காரணமாக அப்பகுதி வழியாக காந்தி மார்க்கெட்டுக்கு செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU