சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்

நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே
இந்த நாட்டிற்காக நீ என்ன செய்தாய்?
என்ற பொன்மொழிகளுக்கேற்ப திருச்சி மண்டல இந்துஸ்தான் பெட்ரோலியம்
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் இன்று நடத்தினர்.


இந்தியா முழுவதும் அக்டோபர் 28 முதல் நவம்பர் 2-ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.ஊழலை ஒழிப்பதற்கு இந்திய அரசு மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு குழுவும் மாநில அரசுத் துறைகளில் ஊழல் குறித்த வழக்குகளை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
தமிழகத்தில் இந்த அமைப்பு சென்னை மல்லிகை மாளிகையில் செயப்பட்டு வருகிறது.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் நாள் முதல் ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருச்சியில் நடந்த இவ்விழாவில் செயலர் அருள்பணி S.G.சாமிநாதன், முதல்வர் முனைவர் ப.நடராஜன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் லஞ்சம் வாங்க மாட்டோம் என உறுதி மொழி கையொப்பங்களை இட்டனர்