திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பாக குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் மூலம் அங்கன்வாடி, மாவட்ட பள்ளி கல்வி துறை, வருவாய் நீதிமன்றம், முத்திரைத்தாள் தனித்துறை, மாவட்ட வருவாய் நிலம் எடுப்பு, மாவட்ட புள்ளியல் துறை, மாவட்ட வருவாய் அலுவலர் டாஸ்மார்க் ஆகிய அலுவலகங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வருவாய் கோட்டாட்சியர் நுழைவுவாயிலில் அருகில் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வழியாக வந்து செல்லும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இதை கண்டும் காணாததுபோல் இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் திருச்சி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் போராடி வரும் நிலையில், அரசு அலுவலகங்கள் அருகில் உள்ள

இந்த குடிநீர் தொட்டியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வதை உடனே சரி செய்யாமல் இருப்பது அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு காட்டாமல் உடனடியாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn