திருச்சியில் மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50,000 பணத்தை பெற்று ஏமாற்றியவர் கைது

திருச்சியில் மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 50,000 பணத்தை பெற்று ஏமாற்றியவர் கைது

திருச்சி கிழக்கு ஆண்டார் வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஒருவரிடம் சங்கரகிருஷ்ணன் வயது 61/22, த.பெ.சுப்பிரமணியன், வசுந்தராப்பிள்ளை சந்து, கீழஆண்டார்வீதி, திருச்சி என்பவர் தான் மாவட்ட ஆட்சிரியர் அலுவலகத்தில் துணை வட்டடாச்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும், தன்னால் அரசு பணி மாற்றுத்திறனாளிக்கான ஒதுக்கீட்டில் வாங்கித்தர முடியும் ஆசை வார்த்தை கூறி என மாவட்ட ஆட்சியர்அலுவல் வளாகத்தில் வைத்து ரூ.25,000/- பணமும், பின்னர் மாற்றுத்திறனாளி வீட்டிற்கு சென்று ரூ.25,000 பணமும் ஆக மொத்தம் ரூ.50,000பெற்றுக்கொண்டு, பொதுப்பணி தமிழ்நாடு அமைச்சுபணி திருச்சிராப்பள்ளி வருவாய் அலகு பதிவறை எழுத்தர் பணி என பணி ஆணை வழங்கியதாகவும், மேற்படி ஆணை பெற்று கொண்ட மாற்றுதிறனாளி பணியில் சேர வேண்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற கேட்டபோது தன்னை எதிரி சங்கர கிருஷ்ணன் மோசடி செய்தது தெரியவந்ததன் காரணமாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் த கார்த்திகேயன், உத்தரவின்பேரில் உடனடியாக புகாரை பெற்று கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து எதிரி சங்கர கிருஷ்ணன் என்பவரை உடனடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். 

மேற்படி புகாரில் துரிதமாக செயல்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு எதிரியை கைது செய்த காந்திமார்க்கெட் சரக உதவி ஆணையர், கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்களிடம் வேலை வாங்கி தருவதாக யாரேனும் தெரிவித்தால் ஏமாற வேண்டாம் என்றும், அவர்களை பற்றிய தகவல்களை உடனடியாக திருச்சி மாநகர காவல்துறைக்கு தெரிவிக்கும்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....  https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn