காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு!

காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு!

Advertisement

திருச்சி திருவெறும்பூர் கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்த கிஷோர் பிரியதர்ஷன்(34) புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். 

Advertisement

இவர் இன்று தனது மாமியாரின் அம்மாவுக்கு திதி கொடுப்பதற்காக ஸ்ரீரங்கம் காவிரி அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்தவர் காவிரி ஆற்றில் மூழ்கினார். 

தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அவரை சடலமாக மீட்டனர். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத கிடங்கில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இறந்த மருத்துவர் கிஷோர் பிரியதர்ஷனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.