22வது கார்கில் வெற்றி தினத்தையொட்டி கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணனின் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை

22வது கார்கில் வெற்றி தினத்தையொட்டி கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணனின் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை

1999ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரின்போது ஜம்மு – காஷ்மீர் திராஸ் பகுதியில் பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்த கார்கில் போரின் 22வது ஆண்டு வெற்றி தினவிழா இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வெற்றிவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் கார்கில் போரில் வெற்றிக்கு வித்திட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கார்கில் போரில் எதிரிகள் முகாமிற்குள் நுழைந்து 4 பேரை சுட்டுவீழ்த்தி ஏவுகணையால் எதிரிகள் முகாமை அழித்து வீரமரணமடைந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில்

இன்று மேஜர் சரவணன் உள்ளிட்ட போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பிரதேச ராணுவப்படை திருச்சி ஸ்டேசன் கமாண்டர் கர்னர் கே.ஜாய் தலைமையில், மேஜர் அக்சய் புன்ச், என்சிசி விமானப்படை தலைமை அதிகாரி குணசேகரன், ராணுவ என்சிசி தலைமை அதிகாரி காளியப்பன், மேஜர் சரவணன் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் செந்தில் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU