ஆடி பெருக்கு - பெருமாள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் சீர்!

ஆடி பெருக்கு - பெருமாள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் சீர்!

ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறைக்கு சீர் கொண்டு செல்லும் நிகழ்வு தொடங்கியது.

ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் ���ுறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார்.

கொரோனா காரணமாக கோயில் மூடப்பட்டுள்ள நிலையில் இம்முறை சீர் கொண்டு செல்லும் நிகழ்வில் பெருமாள் இல்லாமல், சீர் மட்டும் கொண்டு செல்லப்படுகிறது.பொதுவாகவே யானையின் மீது சீர் வைத்து கொண்டு செல்லப்படும் நிலையில், இந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் காரணமாக பட்டாச்சாரியார்கள் சீர் கொண்டு செல்கின்றனர்.

தங்கையான காவிரிக்கு பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் காவேரி ஆற்றில் விடப்படும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று முழு பொது முடக்கம் அமலில் உள்ளதை தாண்டியும் பெருமாளை தரிசனம் செய்ய 50 க்கும் மேற்பட்ட மக்கள் கூடியுள்ளனர். மக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

Advertisement