கோடைகாலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைகோரையில் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கோடைகால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
லால்குடி அருகே எசனைகோரையில் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ்
கோடைகாலம் துவங்கியுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணி எசனை கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமாவளவன் முன்னிலையில் நடைபெற்றது.இதில் மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அமைந்தது. மேலும் கோடைகாலத்தில் குளிர்ச்சியான உணவுகள் உட்கொள்வது காலை மற்றும் மதிய நேர உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்வது என வேளாண் மாணவிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவிகள் ரா.பிரியங்கா, சு.ரிஷிகா, இ.பிரதீபா, பி.பிரபா, மா.ராணி, பா.பிரீத்தி, செ.பூர்ணிமா, ம. ரூபி பிரசன்னா ஆகியோர் கொண்ட குழு கோடைகால பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு பயன்பெறும் வகையில் எடுத்துரைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision