4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் ரயில் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்  ரயில் - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

மதுரை ரெயில்வே கோட்ட ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன்படி வண்டி எண் : 06829 திருச்சியில் இருந்து காரைக்குடி வரை செல்லும் டெமு ரெயில் திருச்சி ரெயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 10.15 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் குமாரமங்கலம், கீரனூர், வல் லனூர், புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, கோட்டையூர் வழியாக காரைக்குடி வரை செல்லும். இந்த மாதம் (ஜூலை) முழுவதும் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் வருகிற 17-ந் தேதி முகரம் பண்டிகை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் திருச்சி - காரைக்குடி ரெயில் 4 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மதியம் 2.30 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision