திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே அரசு டாஸ்மாக் கடை சட்டரை இழுத்து மூடி பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்

பத்து ரூபாய் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது முப்பது ரூபாய் செந்தில் பாலாஜியாக மாறி இருக்கிறார்-பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேட்டி
திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே அரசு டாஸ்மாக் கடை சட்டரை இழுத்து மூடி பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திமுக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் பலரையும் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலை கண்டித்தும் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் லால்குடி சாலையில் திரண்ட பா.ஜ.கவினர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர் டாஸ்மாக் கடையின் இரும்பு சட்டரை இழுத்து மூடி கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவகனரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இதனைத்தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-அரசு டாஸ்மாக் கடை மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலிப்பதை மறுத்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னாள் பத்து ரூபாய் பாலாஜி என்று அழைக்கப்பட்டவர் தற்போது சிறைக்குச் சென்று வந்த பின்னர் முப்பது ரூபாய் அமைச்சர்கள் என்று அழைக்கப்படுகிறார்.
டாஸ்மாக்கில் வாங்கப்படும் கூடுதல் விலையின் பணம் யாருக்கு செல்கிறது. நிர்வாகத்தின் கீழ் நடக்கும் குறைபாடுகள் என காரணம் கூறும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும்.ரூபாய் நோட்டுக்கான அதிகாரப்பூர்வ சிம்பலை தமிழில் குறியீட்டு காட்டுவதன் மூலம் மட்டுமே தமிழை வளர்த்து விட முடியுமா. அப்படி என்றால் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து நாடுகளுக்கும் செல்லும்போது தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகிறார் அப்போது தமிழ் வளர்ந்து விடுமா.ரூபாய் நோட்டு இந்தியா முழுவதும் பயன்படுத்தக்கூடியது. அந்த ரூபாய் நோட்டு சிம்பல் ஆனது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரின் மகன் கண்டுபிடித்தது.
அன்றைய தினம் கலைஞர் மற்றும் நிதி அமைச்சர் பாராட்டி இருக்கிறார். இன்றைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஊழல் பிரச்சனையை மக்களிடையே திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ரூபாய் சிம்பலை மாற்றி நாடகத்தை நடத்தி வருகிறார் என கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision