லால்குடி அருகே கூரை வீடுகள் எரிந்து சாம்பல்.த வெ க சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

லால்குடி அருகே கூரை வீடுகள் எரிந்து சாம்பல்.த வெ க சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

லால்குடி அருகே கூரை வீடுகள் எரிந்து சாம்பல்.த வெ க சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தென்கால் மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் கோபி , பாஸ்கர் ஆகியோரின் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு கூரை வீடுகள் இரண்டும் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.

இந்தத் தகவலை அறிந்த தமிழக வெற்றி கழகம் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, மிளகாய், புளி, உப்பு, மஞ்சள், மல்லித்தூள், கடுகு, எண்ணெய், பற்பசை, குளியல் மற்றும் சலவை சோப்பு வேஷ்டி, சேலை, துண்டு, கைலி, போர்வை,

தலையணை, பாய் போன்ற ரூ. 10000 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை மாவட்டச்‌செயலாளர் திருச்சி M.S.விக்னேஷ் தலைமையில் இணைச்செயலாளர் மாசோ, பொருளாளர் ராஜேஷ், பூவாளூர் பேரூர் கழகச் செயலாளர் சுகுமார், இணைச் செயலாளர் நாதன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision