திருச்சி அரசு பள்ளியில் தமிழக முதல்வர் படம் பொறித்த பைகள்,எழுதுப்பொருட்கள் பறிமுதல்

திருச்சி அரசு பள்ளியில் தமிழக முதல்வர் படம் பொறித்த பைகள்,எழுதுப்பொருட்கள் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் திருச்சி உறையூர் குறத்தெரு  பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் இருந்து 39 க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு  ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் பதிந்துள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்கூல் பேக்,ஜாமென்ட்ரி பாக்ஸ்கள் வழங்கிக் கொண்டிருந்ததை தகவல் அறிந்து வந்த திமுகவினர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவலறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜோசப் தலைமையிலான குழு அப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளியின் அறைக்குள் பள்ளி மாணவர்களுக்கான தமிழக  முதல்வர் முன்னாள் முதல்வர் படங்கள் பொறிக்கப்பட்ட பைகள், எழுது பொருட்கள் அடங்கிய பெட்டிகள் நூற்றுக்கணக்கானவை கைப்பற்றப்பட்டுள்ளன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH