பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்தியைத் திணிக்கக்கூடாது- அன்புமணி ராமதாஸ் 

பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்தியைத் திணிக்கக்கூடாது- அன்புமணி ராமதாஸ் 

திருச்சி புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே பாரதிதாசன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

 பல்கலைக்கழகத்தின் முப்பத்தி ஏழாவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது கடந்த இரண்டு வருடங்களாக கொரானா காரணமாக பட்டமளிப்பு விழா நடக்க வில்லை இரண்டு வருடங்களுக்கு பிறகு நாளை நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்என் ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டமளிப்பு உரை நிகழ்த்தவுள்ளார்.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த விழாவில் வாழ்த்துறை வழங்குகிறார்.

 டெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கழக தலைவர் கனகசபாபதி சிறப்புரையாற்றுகிறார் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ரவி சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு திருச்சி வந்தடைந்தார்.

முதல் முறையாக பொறுப்பேற்ற பின்னர் ஆளுநர் ரவி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இதுவே ஆகும்.

 இதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் விழாவிற்கான அழைப்பிதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த அழைப்பிதழில் பாரதிதாசனும் தாமரையும் இணைந்தார் போல் ஒரு லோகோ காணப்படுகிறது ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் போட்டோவும் இன்னொரு பக்கம் ஆளுநர் ரவி போட்டோவுக்கு நடுவில் விடுதலைநாள் பவள விழாவை குறிக்க ஹிந்தி வாசகம் இடம் பெற்றுள்ளது.

இதனை பாமக வின் இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 அந்த ட்வீட்டில், 'விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக ‘Azadi Ka Amrit Mahotsav’ என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா’ என தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு, அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதை பாரதிதாசன் பல்கலைக்கழகம் மீறியுள்ளது!

அழகான தமிழ் முழக்கத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ள நிலையில், இந்தி முழக்கத்தை பாரதிதாசன் பல்கலைக்கழகம் பயன்படுத்தியிருப்பது இந்தித் திணிப்புதான். தமிழக அரசின் ஆணையை மதிக்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது?

அனைத்து தமிழக அரசு நிறுவனங்களும் மாநில அரசின் ஆணையை மதிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆணையை மதிக்காமல் இந்தி முழக்கத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவை முதல்வர் ஸ்டாலினுக்கும், ராஜ்பவனுக்கு டேக் செய்துள்ளார். இந்த அழைப்பிதழ்தான் சோஷியல் மீடியாவில் முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn