திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டுகளில் மழை நீர் தேக்கம் வடிய நிரந்தர தீர்வு என்ன?- இந்திய கம்யூனிஸ்டு கேள்வி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 60வது வார்டு பகுதிகள் பாத்திமா நகர், செல்வ நகர் ,மங்கள் நகர், அகிலாண்டேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளின் தெருக்களிலும் வீடுகளுக்குள்ளும் தொடர் மழையாலும், கோரை ஆற்றில் ஓடும் நீரால் வடிகால்களால் வழிந்தோடிய நீரால் முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக மழைநீர் வடியாத நிலை உள்ளது. இப்பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் சுரேஷ் நிர்வாக குழு உறுப்பினர் சிவா மேற்குப் பகுதி செயலாளர் முரளி துணைச் செயலாளர் சரண்சிங் பொருளாளர் ரவீந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் இப்ராகிம் பகுதி குழு உறுப்பினர்கள் ஆனந்தன், நாகராஜ் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
திருச்சி மாநகரில் கோரையாறு, உய்யக்கொண்டான், காசி விளங்கம், கொடிங்கால் ஆறு என்ற பெயர்களில் நீர்வரத்து குடமுருட்டி ஆறுமூலம் காவிரியில் கலக்கும் கட்டமைப்பு உள்ளது.
உறையூர் ,கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர், உய்யகொண்டான் பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யும் காலங்களில் வடி கால்களின் மூலமாக ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளில் கலந்து காவிரியில் கலந்து விடும் கட்டமைப்பு உள்ளது.
ஆனால் வடிகால், வாய்க்கால்களை ஆக்கிரமித்தும், குறுக்கியும் உள்ள நிலையை மாநகராட்சி நிர்வாகமும், நீர்வள ஆதாரதுறையும் கண்டுகொள்ளாமல் போனதுதான் தற்போதைய தொடர் மழைக்கு கடந்த 4 நாட்களாக தண்ணீர் வடியாமல் கழிவு நீரும் கலந்து மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் நோய்த்தொற்று சூழல் ஏற்படும்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம், நீர்வள ஆதாரதுறையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால், வாய்க்கால்களை தயவு தாட்சண்யமின்றி கண்டுபிடித்து நீர் வழித்தடம் அதன் போக்கில் சென்று ஆறுகளில் கலந்திடவும் உரிய முறையில் தூர்வாரி மழை ,வெள்ள பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காண வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய...