‌ திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நூற்றாண்டு தொடக்க விழா

‌ திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நூற்றாண்டு தொடக்க விழா

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி, மிகவும் புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி.தமிழ்நாட்டு பெண்களுக்கு. ஹோலி கிராஸ் கல்லூரி கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு அற்புதமான வரலாற்றைக் கொண்டுள்ளதுமேலும் 100 ஆண்டுகளாக பெண் கல்விக்கான உன்னத பணிக்காக சேவை செய்துவருகிறது.

பிரான்ஸில், சாவனாட் சகோதரிகள் புனித சிலுவை அமைப்பை 1833-ல் ஆரம்பித்தார்கள். பெண் கல்வி இவர்களின் நோக்கம். திருச்சிக்கு வந்த இவர்கள், மேரிஸ் தோப்பில் 1901ல் சிறிய பள்ளியை தொடங்க, அதுவே உயர்நிலைப்பள்ளியாக வளர்ந்து 1905-ல் பெரியகடைவீதிக்கு வந்தது. பின்னர் இப்போதுள்ள இடத்தை வந்தடைந்தது. பரிணமித்து,படிப்படியாக வளர்ந்து, 1923 இல் கல்லூரி அந்தஸ்தை அடைந்தது, 1928 இல் இரண்டாம் தர கல்லூரியாகவும், 1964 இல் முதுகலை கல்லூரியாகவும் மாறியது. ஹோலிகிராஸ் கல்லூரி உருவானது. அன்னை சோபி முதல் முதல்வரானார்.

தற்போது, ​​கல்லூரியில் பல்வேறு துறைகளில் 6,236 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரி 28 UG பிரிவு , 22 PG பிரிவு, 11 M.Phil மற்றும் 13 Ph.D ஆராய்ச்சி திட்டங்களை வழங்குகிறது.6000 பெண்கள் படிக்கும் இக்கல்லூரிக்கு A++ தகுதியை NAAC வழங்கியுள்ளது. இங்குள்ள Community Radio 90.4 MHz ஒவ்வொருநாளும் 8 மணிநேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இங்குள்ள The Holy Cross IAS Academy கிராமப்புர பெண்களுக்கு ஒரு வரம். அருட்சகோதரி முனைவர் கிறிஸ்டின பிரிஜிட் முதல்வராக கல்லூரியை வழிநடத்துகிறார்.

திருச்சிக்கு பெருமை சேர்க்கும் கல்லூரிகளில் ஒன்றான ஹோலிகிராஸ் கல்லூரி தற்போது நூற்றாண்டு விழாக்களில் (1923- 2023) பெருமையுடன் அடியெடுத்து வைக்கிறது. 10 ஆகஸ்ட் 2022 அன்று ஹோலி கிராஸ் கல்லூரியில் நூற்றாண்டு ஆண்டு தொடக்க விழா ‌ நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO