சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) சார்பில், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்விற்கு டாக்டர் சாலை ஜெ.கே உலகளாவிய சித்த முத்திரை ஆயுஷ் நல
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், பேராசிரியர் டாக்டர்.சாலை மருதமலை முருகன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர்.சாலை ஜெய கல்பனா நிகழ்வு அறிமுக உரை வழங்கினார். தொடர்ந்து எஸ்.ஆர்.எம் மருத்துவக்
கல்லூரியின் முன்னாள் இணை முதல்வர் டாக்டர் பரமசிவம், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். முன்னதாக முன்னாள் என்.எஸ்.எஸ் தலைவர் வீரசேகரன் வாழ்த்துரை வழங்கினார்.
இறுதியாக பரமேஸ்வரி திருமேனி நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்வில் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கு பின்னர் சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சாலை மருதமலை முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்டாக்டர் சாலை ஜெய கல்பனா சித்த முத்திரை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயிற்சி பெற்றுள்ளனர். ஏறத்தாழ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் சித்த முத்திரை அடிப்படை பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் ஆக்சிஜன் குறைபாடு இருந்தது. அதனை போக்குவதற்கு சித்த முத்திரை வழியில் லிங்க முத்திரை மூலம் பலருக்கு ஆக்சிஜன் அளவை அதிகரிக்க செய்தவர் டாக்டர் சாலை ஜெய கல்பனா. இந்த லிங்க முத்திரையை சென்னை ஐஐடியும் ஆய்வுக்கு உட்படுத்தி சிறப்பானது என அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த முத்திரை மூலம் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் அரசாங்கமும் இந்த முத்திரையை கொரோனா வழிகாட்டுதலில் ஒன்றாக அறிவித்தது.
அடிப்படையிலேயே சித்த முத்திரையை சித்த மருத்துவத்திலும் நாம் பயன்படுத்துகிறோம். டாக்டர் சாலை ஜெய கல்பனா சித்த முத்திரையை உலகம் முழுவதும் எடுத்து செல்ல வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகள் தற்போது அழிந்து வருகிறது. இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் 50 நாடுகளுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு மருத்துவ துறை சார்ந்தவர்கள், இல்லத்தரசிகள் உள்பட பலர் பயின்று வருகின்றனர் என்றார்.
தொடர்ந்து டாக்டர் சாலை ஜெய கல்பனா பேசுகையில், .பாரம்பரிய கலையான முத்திரைகள், வர்மம் உள்ளிட்ட பல முறைகளில் நிறைய பயிற்சிகள் உள்ளது. ஆனால் நம்முடைய பாரம்பரிய முறையில் உடலையும், உயிரையும் காக்க கூடிய பல்வேறு முறைகள் இருந்துள்ளது. அது தற்போது குறைந்து வருகிறது. சித்தர் வாழ்வியல் என்பது மருத்துவம் என்பதை விட வாழ்வியல் என்று கூறலாம். இந்த வாழ்வியல் சில நூறாண்டு காலத்தில் விடுபட்டுள்ளது. சாதாரண எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு விடுபட்டுள்ளது. இதை பழக்கத்தை நாம் மீண்டும் கொண்டு வரும்பொழுது, சிறிய வேறுபாடுகளுடன் பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். ஆனால் இந்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் முத்திரை கலையையும், சித்தர் வாழ்வியல் தத்துவங்களையும், வர்மகலையையும் அனைவருக்கும் கற்று கொடுத்து வருகிறோம். எது மறைக்கப்பட்டு கற்றுக்கொடுக்க கூடாது என இருந்தததோ, அது அனைத்தையும் அந்த தத்துவங்கள் சிதையாமல், மூட நம்பிக்கைகள் கலக்காமல் தெளிவான மருத்துவ முறையாக கற்றுக்கொடுத்து வருகிறோம்.
40 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இதை கற்றுக்கொண்டு அவர்கள் பயனாளிகளாக மாறியுள்ளனர் என்றார். எல்லா மக்களும் ஏற்றுக்கொண்டு நம்முடைய பாரம்பரிய கலையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு இந்த அடிப்படை சித்த முத்திரை பயிற்சி உதவியாக இருக்கும். அனைவரும் இந்த சித்த முத்திரையை கற்றுக்கொண்டு அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision