செயின் பறிப்பு கொள்ளையர்களே உசார்! காத்திருக்கிறது குண்டர் சட்டம்

செயின் பறிப்பு கொள்ளையர்களே உசார்! காத்திருக்கிறது குண்டர் சட்டம்

திருச்சியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது. கடந்த 27.11.2019 அன்று பொன்மலை பகுதியில் முகமது பயாஸ்(52) என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ₹850 பணம் பறித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக முகமது பயாஸ் அளித்த புகாரின் பேரில்,

அலெக்சாண்டர் சாம்சன் (25) பிராங்க்ளின் ஜோஸப் ராஜ் (24) ஆகியோரை கைது செய்த போலீசார் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.