தன் எஜமான் குடும்பத்தை காத்த செல்லப்பிராணி: திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்:

தன் எஜமான் குடும்பத்தை காத்த செல்லப்பிராணி: திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்:

திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் மனைவி, மகன், மகள் என வசித்து வந்தனர்.
திடீரென ஒரு நாள் மாலை வேளையில் வீட்டிற்குள் சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்தது. அப்போது பெருமாளும் அவரது மனைவி மகன் ஆகியோரும் கொல்லைப்புறத்தில் இருந்துள்ளனர். மகள் மட்டுமே வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். பாம்பைக் கண்டதும் அலறியடித்துக்கொண்டு மகள் வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.

பாம்பு வீட்டிற்குள் நுழைந்து விட்டது என கேட்ட பெரும்பாலும் அவருடைய மகன் மற்றும் மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பெருமாளின் செல்லப் பிராணியான முனி என்ற நாய் வீட்டுக்கு ஓடி சென்று அந்த பாம்பை பிடித்து கடித்து கொன்றது.

தன்னை வளர்த்தவர்கள் தன் மீது காட்டிய அன்பைக் காட்டிலும் அவர்கள் மீது வைத்த அன்பு அதிகம் என்பதை செல்லப்பிராணி முனி உணர வைத்துவிட்டது. உப்பிட்டவரை உயிருள்ளவரை நேசிக்கும் செல்லப் பிராணியாக விசுவாசத்திற்கு நமக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது