திருச்சியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்: கலைகட்டும் பிரச்சாரங்கள்

திருச்சியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்: கலைகட்டும் பிரச்சாரங்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தில் அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதியில் 14 ஊராட்சி ஒன்றியங்களில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில் 4077 பதவிகளில் 626 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 3451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார், அமைப்பு செயலாளர் பரஞ்சோதி, அதிமுக நிர்வாகிகள், தோழமை கட்சிகளான தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

முதற்கட்டமாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தில் தேவஸ்தானம், காமநாயக்கன் பாளையம், பெருகமணி, அணலை, அந்தநல்லூர், திருச்செந்துறை உள்ளிட்ட 1 முதல் 5 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதிமுக கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர்கள், அமைச்சர்களுக்கும் அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

திருச்சியின் செய்திகள் அனைத்தும் உடனுக்குடன் உங்கள் வாட்ஸ்அப் குழுவில் மூலம் வந்தடைய கீழ்காணும் TRICHY VISION குழுவில் இணைய உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மேலும் நீங்கள் பார்க்கும் நிகழ்வுகள், செய்திகள் , உங்கள் பகுதியின் செய்திகள்,கட்டுரைகள்,தனிதிறமைகள்,வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களிடம் அனுப்புங்கள் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம்.
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5