பெண் காவல் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாநகர காவல் ஆணையர் பங்கேற்பு:

பெண் காவல் அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாநகர காவல் ஆணையர் பங்கேற்பு:

திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான உடல் நலம், மனநலம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. இவ்விழா காலை 9.30 மணி அளவில் திருச்சி கே.கே நகர் ஆயுதப்படை வளாக சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.பொதுவாக காவல்துறை பணிக்கு செல்வோருக்கு உடல் நலம் மற்றும் மனநலம் இன்றியமையாத ஒன்றாகும். அதனைப் பேணிக் காக்கும் பொருட்டு நம் திருச்சியில் பெண் காவலர்களுக்கு இது போல் நிகழ்ச்சி நடத்தியது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தங்களுடைய பணியினை செய்ய எந்த ஒரு தொய்வும் இல்லாமல் திறமையாக பணியாற்ற செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் அவர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு என்.எஸ் நிஷா அவர்களும் கலந்து கொண்டனர்.
திருச்சி உறையூர் ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை மருத்துவர்
ரமணிதேவி அவர்கள் கூறுகையில் “பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய்களை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவற்றை தடுப்பதற்கான வழி முறைகளையும் ஆண்டுக்கு ஒரு முறை இப் பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும் எனவும்” கூறினார்.
திருச்சி உறையூர் Good Life மனநல ஆலோசனை மையத்தை சேர்ந்த மனநல ஆலோசகர் Jc.S.கீதா கூறுகையில் “பெண்கள் தங்கள் குடும்பத்தையும் குழந்தைகளை பராமரிக்கும் முறையை குறித்தும், மன அழுத்தம் இன்றி வாழ்வது குறித்தும், பொதுமக்களை அணுகும் முறைகள் குறித்தும்” விளக்கினார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ஹெல்த் & ஹைஜீனிக் டிரஸ்ட் நிர்வாகி ராஜலட்சுமி அவர்கள் “Dioxin free napkins” பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துறையைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் மொத்தம் 300 பேர் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, திருச்சி மாநகர காவல் துறையால் முதல்முதலில் நடத்தப்பட்டதாகவும், தங்களுக்கு மிகுந்த பயன்னுள்ளதாகவும் தெரிவித்தனர்.