பத்திரப்பதிவு துறையில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை , கரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த குறிப்பிட்ட சில சார் பதிவாளர்கள் மீது பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்தது.
இதில் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மனைகளை சட்டத்திற்குப் புறம்பாக பத்திர பதிவு செய்ததாகவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட பதிவாளர், சார் பதிவாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் என 17 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் பத்திரப் பதிவுத் துறையில் 17 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் திருச்சி மலைக்கோட்டை சார்பதிவாளர் அஞ்சனகுமார் பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை மாற்றியதற்க்கு மகிழ்ச்சி தெரிவித்து அப்பகுதி பொதுமக்களும்,ஆவண எழுத்தர்கள் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பொதுமக்கள் பலரும் தொடர்ந்து ஏற்கனவே இருந்த சார்பதிவாளர் அஞ்சனகுமார் மீது தொடர்ந்து புகார்கள் அதிகமாக வந்தது. இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டது. தற்பொழுது சார்பதிவாளர் மாற்றம் செய்தது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தனர்.