திருச்சி குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழாவில் இரு சமூகத்தினர் இடையே மோதல். வழக்கம் போல் கோயில் நிர்வாகத்தினர் குழுமாயி அம்மன் தேரை வீதி உலாவிற்காக இழுத்து செல்வார்கள். ஆனால் ஒரு சமூகத்தினர் நாங்கள் இழுத்து செல்வோம் என தெரிவித்ததால் மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தேரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சம்பவ இடத்தில் மாநகர காவல் துறை ஆணையர் காமினி பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தேரை இழுத்துச் சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision